Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் ரூ 2.1 கோடியில் பஸ் ஸ்டாண்ட்  Mar 30, 13
 
பிள்ளையார்பட்டியில் ரூ 2.1 கோடி மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கான இடத்தில் மண் பரிசோதனை பணி துவங்கியது.திருப்புத்தூர்-காரைக்குடி ரோட்டில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம்.இங்கு பஸ் ஸ்டாண்ட் வசதி கிடையாது. இங்கு சர்வதேசதரத்திலான பஸ் ஸ்டாண்ட் உருவாக்க, ஊரக வளர்ச்சித்துறையின் கீழ்ரூ 2.1 கோடி மதிப்பில் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.ரோட்டிற்கு அருகாமையில் உள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள காலியிடத்தில் பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று மண் பரிசோதனையை அழகப்பா இன்ஜினியரிங்கல்லூரி தொழில்நுட்ப பேராசிரியர்கள் சுமதி,விஜயப்ரபா ,ஒன்றியப் பொறியாளர் பழனியப்பன் நடத்தினர்.10 பஸ்கள் நிற்பதற்கான ட்ராக், குடிநீர் தொட்டி, கழிப்பறை,10 கடை,, மாடி தளத்தில் ஆண்,பெண்களுக்கு தனி,தனியாக தங்கும் ஹால்கள்,வட்ட வடிவிலான தூண்களுடன் அமைக்கப்படும்.12 மாதங்களில் திட்டப்பணிகள் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.