Nagaratharonline.com
 
வரத்து இல்லாததால் காய்கறிகளின் விலை கிலோ ரூ.100-ஐ தாண்டியது.  Apr 23, 13
 
கடந்த 40 ஆண்டுக்கு பின், வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. மழையின்மையால், காய்கறி சாகுபடியும் குறைந்துள்ளதுகிணற்று பாசன நீர் மூலம், மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு காய்கறிகளையே காப்பாற்ற முடிகிறது.

இதனால், விளைச்சலும் மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. விளைச்சல் குறைவால், அவற்றின் விலை மூன்று மடங்காக உயர்ந்து விட்டது.ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100, அவரை ரூ.80, தக்காளி ரூ.24, கத்தரி ரூ.60, வெண்டைக்காய் ரூ.40, உருளை ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.50, பீட்ரூட் ரூ.40, பட்டர் பீன்ஸ் ரூ.120, சோயா ரூ.120-, கருணை ரூ.40, கேரட் ரூ.50க்கு விற்கப்படுகிறது.

மலை பகுதிகளிலிருந்து மூன்றில் ஒரு பங்கு காய்கறி வரத்து மட்டுமே உள்ளது.இதே நிலை நீடித்தால், ஒரு சில காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.200 வரை விற்கும் நிலை வரும்.