Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி கல்லூரியில் நிறுவியோர் நாள் விழா  Apr 27, 13
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், நிறுவியோர் நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சன்மார்க்க சபைத் தலைவர் ப.சா. சிங்காரம் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மு. திருநாவுக்கரசு, தமிழாசிரியர் கழக முன்னாள் தலைவர் வீ. வேதநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் நிறுவியோர் படங்கள் திறக்கப்பட்டது. கல்லூரியில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற முதல்வர்கள், பேராசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.