Nagaratharonline.com
 
மதகுபட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரே நிற்க மறுக்கும் பஸ்கள்  May 6, 13
 
மதகுபட்டி போலீஸ் ஸ்டேசன் எதிரில் பஸ்கள் அனைத்தும் நின்று செல்ல ஆணை பிறபிக்கப்பட்டும் பஸ்கள் நிற்பதில்லை.மதகுபட்டி போலீஸ் ஸ்டேசனுக்கு கண்டுப்பட்டி,பாகனேரி மேலப்பூங்குடி,அலவாக்கோட்டை,அழகமாநரி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் வருகின்றனர்.போலீஸ் ஸ்டேசன் ஊர் பகுதியிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் இருப்பதால் மக்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

ஸ்டேசன் எதிரே அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டு, பஸ் நிறுத்தம் என போர்டு வைக்கப்பட்டும் பஸ்களை நிற்பதில்லை. அனைத்து பஸ்களும் போலீஸ் ஸ்டேசனில் நிறுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.