|
மயிலாடுதுறை - திருவாரூர் இடையே பயணிகள் ரயில் இன்று முதல் அறிமுகம் May 11, 13 |
|
தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலக செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
மயிலாடுதுறை - திருவாரூர் இடையே தினசரி பயணிகள் ரயில் இன்று (12ம் தேதி) முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில், ஏழு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இரண்டு லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்படும். மங்கநல்லூர், பேரளம், பூந்தோட்டம், நன்னிலம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு, காலை 7.25 மணிக்கு திருவாரூர் சென்றடையும். எதிர்மார்கத்தில், திருவாரூரில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். மாலை 6.10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு திருவாரூர் சென்றடையும். இரவு 7.35 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு, இரவு 8.40 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
|
|
|
|
|