Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டையில்,கடும் குடிநீர் தட்டுப்பாடு  May 23, 13
 
நாட்டரசன்கோட்டையில், போதிய குடிநீர் வசதியின்றி, மக்கள் தவிக்கின்றனர். கூடுதல் விலைக்கு விற்கும், "மினரல் வாட்டர் கேன்களை' வாங்கி பயன்படுத்துகின்றனர்.

நாட்டரசன்கோட்டை பேரூராட்சி கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலுக்கு, தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தை செவ்வாய் பொங்கல், வைகாசி திருவிழாவை காண, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளியூர் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இந்நகரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, போதிய குடிநீர் திட்டங்கள் இல்லை.

பெரியார் தெருவில் 2 லட்சம், கம்பர், காமராஜர், இலுப்பக்குடி, நக்கீரர் தெருவில், தலா 10 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தொட்டிகள் மற்றும் தெருக்களில் 32 "சின்டெக்ஸ்' தொட்டிகளில், பல செயல்பாடின்றி உள்ளன. கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் தெப்பக்குள நீரை எடுத்து, வடிகட்டி குடிநீராகவும், சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர். வறட்சியால், 25 ஆண்டுக்கு பின், இக்கோயில் தெப்பத்தில் தண்ணீர் வற்றியதால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.