|
NEWS REPORT: தேவகோட்டையில் சுகாதார சீர்கேட்டில் சிக்கிய ஊரணிகள் May 26, 13 |
|
தேவகோட்டையில் 14 ஊரணிகள் உள்ளன. சிலம்பணி ஊரணி, வெள்ளையன் ஊரணியும் சிலம்பணி தேவஸ்தானம் அறநிலையத்துறை சொந்தமானது. கருதாவூரணி நகராட்சிக்கு சொந்தமானது. மற்றவை தனியாருக்கு சொந்தமானவை.
இந்த ஊரணிகள் பயன்பாட்டில் இருந்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள், செடிகொடிகள் மண்டியும், சாக்கடை நீரின் சங்கமமாக உள்ளன. ஊரணிகளில் சுகாதார கேடு மற்றும் துர்நாற்றத்தை நகராட்சி சுகாதார பிரிவு கண்டு கொள்வதில்லை.
நகராட்சி சொந்தமான ஒரே ஊருணியான கருதாவூரணியை சில ஆண்டுக்கு முன் நகரத்தார் சிலரின் முயற்சியால் சீரமைத்து, வேலி அமைக்கப்பட்டது. வெள்ளையன் ஊரணி, வள்ளியப்பச் செட்டியார் ஊரணி, அருணாசல பொய்கை, தின்னப்பச் செட்டியார் ஊரணி, அம்மச்சி ஊரணி சுகாதார கேட்டினை பிடியில் சிக்கியுள்ளன. ஊரணி அருகில் குப்பை சேகரிப்பு தொட்டிகளை வைத்திருப்பதால் பாதி அள்ளியும், அள்ளாமலும் இருக்கும் நிலை இருப்பதால் பாலீதின் குப்பைகள் பறந்து ஊரணிகளை நிறைக்கின்றன. நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரியுள்ளனர். |
|
|
|
|
|