|
அலவாக்கோட்டை : பட்டப்பகலில் கத்தி முனையில் கொள்ளை முயற்சி May 29, 13 |
|
அலவாக்கோட்டையை சேர்ந்தவர் ராமநாதன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி கண்ணாத்தாளுடன் வசிக்கிறார். மதகுபட்டியில் "பேன்சி ஸ்டோர் நடத்துகிறார். தினமும் கணவன்,மனைவி இருவரும் கடைக்கு சென்றுவிடுவர். வழக்கம்போல் நேற்று, 9 மணிக்கு கடைக்கு சென்றனர். இதை நோட்டமிட்ட 6 பேர், 9.30 மணிக்கு பின்வாசல் வழியாக ராமநாதன் வீட்டுக்குள் புகுந்தனர். அறிமுகமில்லாத நபர்கள் உள்ளே நுழைவதை பார்த்த பக்கத்து வீட்டுகாரர் ராமநாதனுக்கு தகவல் கொடுத்தார். அவர் சிலருடன் வீட்டுக்கு விரைந்தார். இவர்களை கண்டதும் உள்ளே இருந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். ஊர்மக்களும் அங்கு திரண்டனர்.
தப்பிக்க முயன்ற 6 பேரில், மூவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். கத்தியுடன் தப்பிய மேலும் மூவரை பிடிக்க, ஊர் மக்கள் குழுக்களாக பிரிந்து தேடியனர். அரளிக்கோட்டை விலக்கில் ஒருவரும்,மஞ்சள் காவி வேட்டியுடன் மாறுவேடத்தில் தப்பிக்க முயன்ற மற்றொருவரும் சிக்கினர். 5 பேரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.தப்பிய மதகுப்பட்டி வெள்ளைச்சாமியை தேடுகின்றனர். இவர் தான் ராமநாதன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக திருச்சியில் வேலை பார்த்தபோது, பழகிய நண்பர்களை வரவழைத்து, கூட்டுக்கொள்ளையில் ஈடுபட முயன்றதுதெரியவந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். |
|
|
|
|
|