|
NEWS REPORT: பட்டதாரிகளுக்கு மெர்க்கண்டைல் வங்கியில் கிளார்க் பணி May 29, 13 |
|
தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கிளார்க் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 24க்குள் இருத்தல் வேண்டும். முதுலை பட்டதாரிகள் 26க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
விண்ணப்பதாரர்கள் www.tmb.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 15.06.2013 க்குள் விண்ணப்பித்தல் வேண்டும். பூர்த்தி செய்து விண்ணப்பித்த ஆன்லைன் விண்ணப்பத்தினை கணினி பிரதி எடுத்து டி.டி. மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும். (ஆன்லைன் பதிவு செய்த அடுத்த 5 நாட்களுக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்).
பூர்த்தி செய்யப்பட்ட கணினி பிரதி நகலை அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd. Head Office, # 57, V. E. Road, Thoothukudi 628002 .
ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி: 15.06.2013 |
|
|
|
|
|