Nagaratharonline.com
 
பொன்புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோவில் மாம்பழத் தேரோட்டம்  May 30, 13
 
பொன்புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோவில் மாம்பழத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோவிலில் மே 21 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருவீதியுலா ஆகியவை நடைபெற்றது.

தேர் மேலரதவீதி, நகைக்கடை பஜார், முக்கிய வீதிகளின் வழியே வந்து நிலையை அடைந்தது. தேர் வந்த வழியில் உள்ள வீடுகளின் மாடங்களில் இருந்து மாம்பழங்கள் பக்தர்களுக்காக வீசப்பட்டது. இதுவே மாம்பழத்தேரோட்டத்தின் சிறப்பாகும்.