Nagaratharonline.com
 
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110  Jun 3, 13
 
விளைநிலங்களிலிருந்து வெங்காயத்தை சந்தைக்குக் கொண்டு வராமல், இடைத்தரகர்கள் பதுக்கி வைத்திருப்பதால் சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயம் சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ரூ. 110 வரை விற்கப்படுகிறது.

இடைத்தரகர்கள் வெங்காயத்துக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதால், அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சின்ன வெங்காயத்தை ஈரம் படாமல் வைத்தால் 2 மாதங்கள் வரை கெட்டுப் போகாது.