|
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் தாயார் மரணம் Jun 7, 13 |
|
சென்னை: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் தாயார் லக்ஷ்மி பழனியப்பன் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 92.
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் தாயார் லக்ஷ்மி பழனியப்பன்(92). அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில வாரங்களாகவே அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரை காண சிதம்பரம் அடிக்கடி சென்னை வந்து சென்றார்.
இந்நிலையில் அவர் இன்று அதிகாலை தனது வீட்டில் காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் மயிலாப்பூர் மயானத்தில் இன்று மாலை நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவருக்கு ப. லக்ஷ்மணன், ப. சிதம்பரம் ஆகிய 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Source:Oneindia |
|
|
|
|
|