Nagaratharonline.com
 
காரைக்குடி : ஆம்னி பஸ் டிக்கெட் விற்பனையில் போலி : கடைசி நேரத்தில் ஏமாறும் பயணிகள்  Jun 9, 13
 
காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சென்னை, பெங்களூருக்கு தனியார் ஆம்னி பஸ் புக்கிங் ஆபீஸ்கள் உள்ளன. நேரடி அலுவலகங்களாகவும், சிலர் ஏஜென்ட் அலுவலகமாகவும் செயல்படுகின்றனர். இங்கு டிக்கெட் ஆன்லைனில் புக்கிங் செய்யப்படுகிறது. கம்ப்யூட்டர் பழுது, இணையதள இணைப்பு கிடைக்காத நேரத்தில், கையினால் எழுதி, "புக்கிங்' செய்கின்றனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் புக்கிங் செய்யும் சில டிக்கெட்டுகள் பதிவு எண் இன்றி,போலியாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட தேதி,நேரத்தில் பஸ் ஏற வரும்போது, "டிக்கெட் போலி', என, தெரிகிறது. இந்த டிக்கெட்டை பதிவு செய்தவர் தற்போது இல்லை, என கூறி பஸ்சில் ஏற்ற மறுக்கின்றனர். ஏமாறும் பயணிகள், வேறு வழியின்றி மீண்டும் டிக்கெட் எடுத்து பயணிக்கும் நிலை உள்ளது.

பள்ளத்தூர் சுப்பிரமணியன் கூறுகையில், காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னைக்கு, பிரபல தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில், அழகப்பன் என்பவருக்காக, மே 23ல் ஏ.சி., கோச்சில், ரூ.710 ரூபாய்க்கு டிக்கெட் புக்கிங் செய்தேன். பயண தேதி, ஜூன் 7 இரவு 9.15 மணி என குறிப்பிடப் பட்டிருந்தது. புக்கிங் கவுண்டரில் உள்ளவர், கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை, என கூறி கையினால், எழுதி கொடுத்தார். 7ம் தேதி பஸ் ஏற வந்த அழகப்பனை, பஸ்சில் ஏற விடாமல், டிக்கெட் கொடுத்தவர் ஓடி விட்டார், என கூலாக கூறிவிட்டனர். வேறு பஸ்சில் அவர் சென்னை சென்றார். மறுநாள் அலுவலகத்தில் சென்று கேட்டால், அவர் இறந்துவிட்டார், என கூறுகின்றனர். எது உண்மை என, தெரியவில்லை. இப்படி பலர் ஏமாற்றப்படுகின்றனர், என்றார்.