Nagaratharonline.com
 
சென்னையில் ஜூலை மாத இறுதிக்குள் மினி பேருந்து இயக்கம் "ஷேர்' ஆட்டோக்களுக்கு மவுசு குறையும்?  Jun 14, 13
 
ஜூலை இறுதிக்குள், சென்னையில் மினி பேருந்துகளின் இயக்கம் துவங்க வாய்ப்புள்ளதாக, போக்குவரத்து துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

தற்போது, மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ள வழித்தடங்களில், பயணிகளை ஏற்றி செல்லும் பணியில், அதிகளவில் "ஷேர்' மற்றும் "அபே' ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.அந்த வழித்தடங்களில், மினி பேருந்துகள் இயக்கப்பட்டால், ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறைய வாய்ப்புள்ளது