|
பள்ளத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நூறாம் ஆண்டு நிறைவு விழா Jun 23, 13 |
|
பள்ளத்தூர் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நூறாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 108 கலசாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரசித்திபெற்ற பள்ளத்தூர் நகரத்தார் சிவன்கோயிலில் ஸ்ரீகணேசர், ஸ்ரீஸ்கந்தசமேதராய், ஸ்ரீ மீனாட்சி உடனாய ஸ்ரீ சுந்தரேஸ்வரர் பரிவார தேவதைகள் அமையப்பெற்ற இக்கோயில், எழுப்பப்பட்டு நூறாண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி விழா நடைபெற்றது.
விழாவையொட்டி புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சரஸ்வதி, தன உள்ளிட்ட பூஜைகளுடன் முதல் கால யாக பூஜை தொடங்கப்பட்டு, வெள்ளிக்கிழமை காலையுடன் நான்காம் கால யாக பூஜை நிறைவடைந்தது.
108 கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை பள்ளத்தூர் நகரத்தார்கள் செய்திருந்தனர்.
விழாவையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
|
|
|
|
|