|
விவசாயம் பொய்த்ததால் மூடப்பட்டு வரும் சில்வர் பட்டறை Jun 25, 13 |
|
காரைக்குடி முத்துப்பட்டணத்தில்,30க்கும் மேற்பட்ட சில்வர் பட்டறைகள் உள்ளன. இங்கு கொட்டான்,பால்குடம், நெய்வாளி, அடுக்கு பாத்திரங்கள் செய்யப்படுகிறது.சிறந்த நேர்த்தியை கடைபிடிப்பதால்,செட்டிநாட்டு சில்வர் பொருட்களுக்கு, தமிழகம் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் மவுசு உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் தகடு மட்டுமன்றி, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து தகடுகள் இறக்குமதி செய்யப்பட்டு, சில்வர் பாத்திரங்கள் செய்யப்பட்டது.சில்வர் பொருட்களின் விலையும் குறைவாக இருந்தது. தற்போது சேலம் தகடுகளின் தரத்தால், இறக்குமதி குறைந்து இங்கிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகிறது.சேலம் தகடின் விலை கிலோ ரூ.325 ஆக உள்ளது. இவை பாத்திரமாக மாறும்போது, கிலோ 500 முதல் 550 வரை விற்க வேண்டியதுள்ளதால், தமிழகத்தில் உள்ள சில்வர்பட்டறை வியாபாரிகள், சேலம் தகடை வைத்து பாத்திரங்கள் தயாரிக்கும் போது, அவற்றை கடைகளில் விற்பனை செய்ய முடிவதில்லை.
தற்போது மழையின்மையாலும், விலைவாசி உயர்வாலும், சீர்வரிசை பட்டியலில், சில்வரின் பயன்பாட்டை வெகுவாக குறைத்து விட்டனர். இதனால், இருக்கின்ற ஒரு சில பட்டறைகளும் மூடப்படும் நிலையில் உள்ளது. |
|
|
|
|
|