|
பிஎஸ்என்எல் புதிய இணைப்பகங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா Jan 6, 10 |
|
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் அரிமளம், குழிபிறை, ராயவரம், கே. புதுப்பட்டி ஆகிய ஊர்களில் அமையவுள்ள பிஎஸ்என்எல் புதிய தொலைபேசி இணைப்பகங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா கே. புதுப்பட்டியில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு திருச்சி தொலைத்தொடர்பு மாவட்ட முதன்மைப் பொது மேலாளர் ஏ. பால்ராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 7 பேருக்கு அகலக்கற்றை இணையதள இணைப்புகள் வழங்கப்பட்டன.
ஊர் பிரமுகர்கள் கே. கணபதி, நாகபூஷணம், பிஎஸ்என்எல் துணைப் பொது மேலாளர்கள் சுப்பிரமணியன், நடேசன், குமரேசன், செயற்பொறியாளர் நீலமேகம், உதவிபொதுமேலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
source : Dinamani |
|
|
|
|
|