Nagaratharonline.com
 
ரூ.10,000 லஞ்சம்வாங்கிய பொன்னமராவதி தாசில்தார் கைது  Jul 12, 13
 
பொன்னமராவதி அடுத்த அரசர்மலையைச் சேர்ந்தவர் விவசாயி சின்னையா. சொந்தமாக டிராக்டர் வைத்துள்ள இவர், அதை விவசாய பணிகளுக்கு மட்டுமின்றி மணல் கடத்தலுக்கும் பயன்படுத்தி வருகிறார். பொன்னமராவதி அருகிலுள்ள காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி கடத்துவதை சின்னையா வழக்கமாகக் கொண்டிருந்தார்.இதற்காக தாசில்தார் துரைராஜ்க்கு மாதந்தோறும், 10,000 ரூபாய் வீதம், லஞ்சம் கொடுத்து வந்துள்ளார். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள், பலர் லஞ்சம் கொடுக்காமல் மணல் கடத்துவதை அறிந்த சின்னையா, அ.தி.மு.க.,வினரைப் போன்று தானும் லஞ்சம் கொடுக்காமல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.இம்மாதம், 10ம் தேதி ஆகியும் சின்னையாவிடமிருந்து, லஞ்சப் பணம் வராததால் ஏமாற்றமடைந்த தாசில்தார் துரைராஜ், அவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னையா, இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்சஒழிப்புத்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.

போலீஸார் அறிவுரையின் பேரில் நேற்று காலை, 11.30 மணிக்கு மேல் பொன்னமராவதி தாலுகா அலுவலகத்துக்குச் சென்ற சின்னையா, ரசாயனம் தடவிய, 10,000 ரூபாய் அடங்கிய நோட்டுகளை தாசில்தாரிடம் கொடுத்துள்ளார்.பணத்தை பெற்றுக்கொண்டதும் மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்சஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி., ரெத்தினவேல், இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர், தாசில்தார் துரைராஜை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.