Nagaratharonline.com
 
காரைக்குடியில் கார் திருடும் கும்பல் : வாகன ஓட்டிகள் உஷாராக வேண்டுகோள்  Jul 23, 13
 
காரைக்குடியில் நிறுத்தி வைக்க பட்டுள்ள காரை திருடும் கும்பல், ஊடுருவியுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
காரைக்குடியை மையமாக கொண்டு, வழிப்பறி, டூவீலர் திருட்டுகள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

கடந்த சில நாட்களாக, கார் திருடும் கும்பல், காரைக்
குடியை முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம், சர்ச் 4வது தெருவை சேர்ந்த சொக்கலிங்கம்,54, என்பவர், செக்காலை ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு அவரது டி.என்.63 கியூ 4567, 2010 மாடல் காரை நிறுத்தி விட்டு, சென்றுள்ளார்.
ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு திரும்பிவந்து, பார்த்தபோது, அவரது கார் திருட்டு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம்.

இதே போல், கடந்த சிலநாட்களுக்கு முன்பு, அருணாநகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த, பொலிரோ கார் திருட்டு போயிருந்தது. தொடர் கார் திருட்டு கும்பலால், வாகனங்கள் வைத்திருப்பவர்கள், அதிர்ச்சியில் உள்ளனர்.
காரைக்குடி டி.எஸ்.பி.மங்களேஸ்வரன் கூறும்போது: கார்களை வீட்டில் ஷெட்டில் விட வேண்டும். கார்களில் பாதுகாப்பு லாக்கர்களை பொருத்த வேண்டும். அனுமதியில்லாத இடங்களில் விடக்கூடாது. வெளியூர் செல்பவர்கள் அதற்கென உரிய இடத்தில், காரை நிறுத்தி விட்டு செல்ல வேண்டும்.
ரோட்டு ஓரங்கள், பஸ் ஸ்டாண்டுகளில் நிறுத்திவிட்டு செல்லக்கூடாது. வெளியூர் செல்பவர்கள், வீட்டின் அருகில் உள்ள நண்பர்கள், உறவினர்களிடம், சொல்லி விட்டு செல்ல வேண்டும். சாவியை மறந்து வைத்து செல்லக்கூடாது. டிரைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றார்.