Nagaratharonline.com
 
தேவகோட்டை மெய்யப்பன் செட்டியார் கொலை வழக்கில் 5 பேர் கைது; நகை, பணம் மீட்பு  Jul 31, 13
 
தேவகோட்டை மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் மெய்யப்பன். ஜூலை 25, மதியம் 3 மணிக்கு, அவரது வீட்டிற்குள் நான்கு பேர் நுழைந்தனர். மெய்யப்பன், மனைவி லட்சுமி மீது மிளகாய் பொடி தூவி, கழுத்தை நெரித்தனர். தடுக்க வந்த, மெய்யப்பனை கத்தியால் குத்தி, பணம், நகைகளை கொள்ளையடித்தனர்.

மெய்யப்பனின் வீட்டு மாடியில், சில ஆண்டுகளுக்கு முன், டாக்சி டிரைவர் "எரக்காட்டி' கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வசித்தார். அவரிடம் விசாரித்த போது, கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார்.
"மெய்யப்பனிடம், பல கோடி ரூபாய் உள்ளது; கொள்ளையடிக்கலாம்' என, கூட்டாளிகளிடம், கிட்டு கூறியுள்ளார்.

கொள்ளை நடந்த அன்று, மெய்யப்பன் வீட்டுக்கு வெளியே இருவர் நின்று கண்காணிக்க, மற்றவர்கள் உள்ளே சென்றனர். மனைவி லட்சுமியை கும்பல் தாக்கியதால், மெய்யப்பன் போராடினார். ஆத்திரமுற்ற கும்பல், கத்தியால் குத்தி விட்டு, உள்ளே சென்று கொள்ளையடித்தது. சில நிமிடங்களில், மெய்யப்பன் பலியானார்.
"செட்டியார் செத்துட்டாருடா..' என, ஒருவன் கூறியதை தொடர்ந்து, கிடைத்த வரை ஆதாயம் என்று, ஒரு பீரோவில் இருந்த பணத்தை மட்டும் கொள்ளையடித்துச் சென்றனர். இதனால், இரண்டு பீரோவில் இருந்த 200 பவுன் தப்பியது. ராமநாதபுரம் மீமிசல் சென்ற கும்பல், நகை, பணத்தை பங்கு போட்டனர்.

10 பவுன் நகை, 3 லட்சத்து 85 ஆயிரத்தை கைப்பற்றினர்.