Nagaratharonline.com
 
வலையபட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்  Jul 31, 13
 
வலையபட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வுப் பயிலரங்கம், முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொற்றா நோய்களான ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய், கருப்பை வாய், மார்பக புற்றுநோய் ஆகிய நோய்களுக்கான அறிகுறிகள்,அதைத் தடுக்கும் வழிமுறைகள், இந்நோய்களைப் பரிசோதிக்க அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் ஆகியவற்றை விளக்கினர்.