Nagaratharonline.com
 
NEWS REPORT: சிறு­வா­புரி முருகன் கோவிலில் 11ம் தேதி கல்­யாண மகோற்­சவம்  Aug 6, 13
 
திரு­மண தடை­களை போக்­க­வல்ல, வள்­ளி­ம­ண­வாள பெரு­மா­னுக்கு கல்­யாண மகோற்­சவம் வரும், 11ம் தேதி, சிறு­வா­புரி பால­சுப்­ர­ம­ணிய சுவாமி கோவிலில் நடக்க உள்­ளது.

சென்னை - கோல்­கட்டா நெடுஞ்சா­லையில், சென்­னையில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்­ளது சின்­னம்­பேடு கிராமம். இங்கு, சிறு­வா­புரி சுப்­ர­ம­ணிய சுவாமி கோவில் உள்­ளது.

அரு­ண­கி­ரி­நா­தரால் திருப்­புகழ் பெற்ற தல­மான
இங்கு, மணக் ­கோ­லத்தில் காட்­சி­ய­ளிக்கும் வள்ளிமண­வாள
பெரு­மானை வணங்­கினால், திரு­மணம் கைகூ­டு­
வ­தாக பக்­தர்கள் நம்­பிக்­கை­யுடன் வரு­கின்­றனர். திரு­மண பிரார்த்­தனை நிறை­வேற, சிறு­வா­புரி முருகன் கோவி­லுக்கு தொடர்ந்து, ஆறு வாரமும் ஏதா­வது ஒரு கிழ­மையில் வர­வேண்டும்.
ஆறு வாரமும் வர­மு­டி­யாத பக்­தர்­க­ளுக்­காக, வள்ளி மண­வாள பெரு­மா­னுக்கு கல்­யாண மகோற்­சவம் நடத்தி, திரு­மண தடை­களை போக்கும் மண­மாலை அணியும் வழி­பாடு கடை­பி­டிக்­கப்­ப­டு­கி­றது.
இதில், மண­மா­காத ஆண், பெண்கள் , மாலை கொண்டு வந்து சுவா­மிக்கு அணி­வித்து, அதை பிர­சா­த­மாக பெற்று, அணிந்து, சுவா­மியை வலம் வர வேண்டும்.
இந்த பிரார்த்­த­னையில் பங்­கேற்­போ­ருக்கு, அடுத்த கல்­யாண மகோற்­ச­வத்­திற்குள் திரு­மணம் கைகூடும் என்­பது நம்­பிக்கை.