|
வீணாகும் தண்ணீரால் பாழாகும் தார்ச்சாலை Jan 7, 10 |
|
பொன்னமராவதி பகுதியில் ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட குழிகளினால் குண்டும், குழியுமாக இருப்பது ஒருபுறமும், குழாய் பதித்து குழாய் வழியாக வெளியேறும் தண்ணீர் ஒருபுறமும் ரோடுகளை சீரழித்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.தூத்தூர் பள்ளிக்கூடம் அருகே தண்ணீர் வீணாகிறது.
புதுவளவு அருகே தண்ணீர் வீணாகிறது. அமரகண்டான் குளம் களிங் அருகே காற்றுக்காக வைக்கப்பட்ட குழாய் மூலம் தண்ணீர் வீணாகிறது. பொன்னமராவதி யூனியன் ஆபீஸ் செல்லும் வழியில் குழாய் மூலம் தண்ணீர் வெளியேறி குளம் போல் காட்சியளிக்கிறது. வீணாகும் தண்ணீர் சாலைகளில் ஓடி சாலைகளை சீரழிக்கிறது.காவிரி கூட்டி குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்பதிப்பு ஏற்பட்டதிலிருந்து இன்று வரை பொன்னமராவதி யூனியன் ஆபீசிலிருந்து புதுவளவு அவுட்டர் வரை ரோடுகள் குண்டும், குழியுமாக காட்சியளித்து மோட்டார் சைக்கிள், பஸ், கார், வேன் ஓட்டுநர்கள் அன்றாடம் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். மேலும் காவிரி தண்ணீர் வீணாவது ஒருபுறம் இருந்தாலும் தள்ளுவண்டியில் தண்ணீர் கை பம்பில் அடிக்கும் கூலித்தொழிலாளிகள் மகிழ்ச்சியாக குழாய் மூலம் வெளியேறும் தண்ணீரை பிடித்து சென்றனர்.
source : Dinamalar |
|
|
|
|
|