Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னைக்கு வயது 375  Aug 21, 13
 
சென்னையின் 375- வது பிறந்தநாள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு சென்னையின் வரலாறு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

1639 ஆகஸ்ட் 22 -ஆம் தேதி சென்னை உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர்.

இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் 1639 -ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்து சென்னை நகரம் உருவானது.

1646 கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள்தொகை 19 ஆயிரம். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் மக்கள்தொகை சுமார் 50 லட்சம் ஆகும்.

1947 -ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பின்பு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 -ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996 -ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.