Nagaratharonline.com
 
இரவில் பெட்ரோல் பங்க்கை மூட முடிவு?  Sep 1, 13
 
அமெரிக்க டாலருக்கு இணையாக, இந்திய ரூபாயின் மதிப்பு, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால், மத்திய அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக, நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதை சமாளிக்க, மத்திய அரசு போராடி வருகிறது.அதிக மக்கள் தொகையுள்ள இந்தியாவில், பெட்ரோலியப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது;

பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் நேரத்தை குறைக்கும் வகையில், இரவு, 8:00 மணி முதல், காலை, 8:00 மணி வரை வரை மூட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 16 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசுக்கு, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், வீரப்ப மொய்லி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.