Nagaratharonline.com
 
NEWS REPORT: உழவன் ரயிலில் 1,288 இருக்கைகள்  Sep 1, 13
 
உழவன் விரைவு ரயில் தஞ்சாவூரிலிருந்து நாள்தோறும் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.55 மணிக்கு சென்னையை சென்றடையும். இதேபோல, சென்னையிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு மறுநாள் காலை 7.15 மணிக்கு வந்தடையும்.

இதில், 788 முன்பதிவு படுக்கைகளும், 440 முன்பதிவு அல்லாத இருக்கைகளும் இருக்கின்றன. இவற்றில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் 10 படுக்கைகளும், இரண்டடுக்கு குளிர் சாதனப் பெட்டியில் 66 படுக்கைகளும், மூன்றடுக்கு குளிர் சாதனப் பெட்டியில் 64 படுக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 648 படுக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ. 1,235-ம், இரண்டடுக்கு குளிர் சாதனப் பெட்டிக்கு ரூ. 740-ம், மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டிக்கு ரூ. 520-ம், இரண்டாம் வகுப்புக்கு 195-ம், முன்பதிவு அல்லாத பெட்டிக்கு ரூ. 100-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.