|
தமிழக அரசு சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை அகற்ற மனு: ஹைகோர்ட் தள்ளு�� Sep 20, 13 |
|
|
|
சென்னை ஹைகோர்டில் பொதுநல மனுவில் கூறப்பட்டு இருந்தது:
தமிழ்நாடு அரசின் சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் இடம் பெற்றுள்ளது. இது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மேலும், அரசு சின்னத்தில் இடம் பெற்றுள்ள தேசிய கொடியின் அளவு தவறாக உள்ளது.எனவே கோவில் கோபுரத்தை அகற்றி, சரியான தேசிய கொடியின் அளவை அரசு சின்னத்தில் பொறிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
தலைமை நீதிபதி அறித்த தீர்ப்பின் விபரம் வருமாறு:
ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் இதுவரை எழுந்தது இல்லை. ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடும் பண்டிகையின்போது, அரசியல் தலைவர்கள் அதில் பங்கேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வழக்கும் இன்றும் நடைமுறையில் உள்ளது. எனவே அரசு சின்னத்தில் கோவில் கோபுரம் உள்ளதால், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறமுடியாது. தேசிய சின்னம் மற்றும் பெயர் (தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்) சட்டம் மற்றும் இந்திய தேசிய கொடி விதிகள் சட்டம் ஆகியவற்றை மீறவில்லை. இதில் தேசிய கொடி அவமதிக்கப்படவில்லை. எனவே இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
source : Thatstamil |
|
|
|
|
|