|
பழனியிலிருந்து சென்னைக்கு அக்டோபர் 2-ல் புதிய ரயில்: என்.எஸ்.வி.சித்தன் Sep 21, 13 |
|
பழனியிலிருந்து சென்னைக்கு புதிய ரயில் சேவை, அக்டோபர் 2ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னை சென்ட்ரலிலிருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களில் இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8 மணி அளவில் பழனியை வந்தடையும்.
அதேபோல் ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய நாள்களில் பழனியிலிருந்து மாலை 6.30 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை 5 மணி அளவில் சென்னை சென்ட்ரலை சென்றடையும். கரூர், சேலம், காட்பாடி மார்க்கமாக இந்த ரயில் இயக்கப்படும்.
முன்பதிவு அல்லாத 7 பெட்டிகளுடன் மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில், பழனியிலிருந்து சென்னை வரை 2ஆம் வகுப்பு கட்டணமாக ரூ.140 வசூலிக்கப்படும்.
சென்னையிலிருந்து வரும் ரயில் பழனியை சென்றடைந்த பின்னர், அங்கிருந்து பயணிகள் (பாசஞ்சர்) ரயிலாக இயக்கப்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். |
|
|
|
|
|