|
பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல் Oct 8, 13 |
|
பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வர்த்தகர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொன்னமராவதி - வேந்தன்பட்டி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். பொன்னமராவதிக்கு ரயில் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். கல்லூரி மாணவர்களின் நலன் கருதி பொன்னமராவதி திருமயத்துக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்பட வேண்டும். பொதுமக்களை பாதிக்கும் கூம்பு ஒலிபெருக்கிகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |
|
|
|
|
|