|
பொன்னமராவதி பேரூராட்சி கூட்டம் Jan 11, 10 |
|
பொன்னமராவதி பேரூராட்சி கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார்.துணைத்தலைவர் ராஜேந்திரன், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு :
ஜெயமணி : வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களை பெயர் சேர்க்க பாரம் கொடுத்துள்ளீர்கள். அது ஆங்கிலத்தில் உள்ளது. அதைப்படிக்க நான் ஒரு ஆளைப்பிடிக்க வேண்டியுள்ளது. தமிழில் மாற்றித்தருவீர்களா?செயல் அலுவலர் : பாரம் அப்படித்தான் வந்துள்ளது. பெயர்களை தமிழில் எழுதித்தாருங்கள். நாங்கள் எழுதிக்கொள்கிறோம்.காளிதாஸ் : புதுப்பட்டியில் 600மீ ரோடு போடும் அளவிற்கு இடம் உள்ளது. அதை எங்களுக்கு ஒதுக்கித்தாருங்கள்.பேரூராட்சி தலைவர் : பஸ் ஸ்டாண்டிலிருந்து சங்கரன் குண்டுவரை ரோடு போட உள்ளோம். அதைக்கேட்காதீர்கள். நிதியை வீணடிக்க வேண்டாம்.
ராஜா : அம்மன் கோயில் தெரு கட்டாயமாக போர்க்கால அடிப்படையில் போட வேண்டும்.பேரூராட்சி தலைவர் : உங்களுக்கு நபார்டு திட்டத்திலே ரோடு வந்துவிடும்.பொன்னம்மாள் : 6வது வார்டிலே என்ன செய்துள்ளீர்கள்?பேரூராட்சி தலைவர் : ரூ.30லட்ச மதிப்பில் 6வது வார்டிற்கு தான் செய்துள்ளோம்.வெங்கடேசன் : பொன்னமராவதி அமரகண்டான் சுற்றி பூங்கா அமைக்க வேண்டும்.செயல் அலுவலர் : செய்வோம்.ராஜா : பேரூராட்சி அலுவலக கட்டடம் ஏற்கனவே மழைக்கு ஒழுகுகிறது. மேலும் கட்டுவது சாத்தியமாகாது.செயல் அலுவலர் : இப்ப ரூப் போட்டு மேலே கட்டடம் கட்டியுள்ளதால் ஒழுகாது.ஜெயமணி : எம்ஜிஆர் நகர் உடுப்பி ஹோட்டல் எதிர்புறம் குடிசைப்பகுதி சிமென்ட் ரோடு போட வேண்டும்.பேரூராட்சி தலைவர் : யாருக்குத்தான் ஒதுக்குவது நிதி வந்தவுடன் ஜெனரல் பண்டில் போடுவோம்.பொன்னம்மாள் : பேரூராட்சி சந்தையில் காய்கறிகள் வாங்க சிங்கம்புனரி பேரூராட்சியில் அமைந்தது போல, பொன்னமராவதியிலும் அமைக்க வேண்டும்.செயல் அலுவலர் : ரூ.10 லட்சம் மதிப்பில் ஒதுக்கீடு செய்து கான்கிரீட் தளம் அமைத்து பொதுமக்கள் நின்று காய்கறிகள் வாங்குமாறு கட்டப்படும்
.வெங்கடேசன் : 4 மாதமாகவே நான் சொல்கிறேன். என் வார்டில் கால்வாய் கட்ட வேண்டுமென்று பல கூட்டத்தில் மினிட்டல் ஏற்பட்டுள்ளது. ஏன் செய்யமாட்டேன் என்கிறீர்கள்.செயல் அலுவலர் : கட்டாயமாக இந்தமுறை செய்து தருகிறோம்.சிங்காரம் : பைப் கனெக்ஷனுக்கு டெபாசிட் குறைக்க வேண்டும்.செயல் அலுவலர் : நம்ம போடுவது அல்ல. அது அரசாங்கம் நிர்ணயித்து வைத்துள்ளார்கள்.ஜெயமணி : பைப் லைனிற்கு ரூ.12ஆயிரம் வரை வசூல் செய்யப்படுகிறதாம். யார் வசூல் செய்வது.செயல் அலுவலர் : அப்படி நாம் வாங்குவது கிடையாது. லேபர் சார்ஜ் ஆய்வுக்கட்டணம் என ரசீது போட்டுக்கொடுத்து விடுவோம்.சிங்காரம் : பகல் 12 மணிக்கு கொசுமருந்து அடிக்கச்சொல்லுங்கள்.செயல் அலுவலர் : கொசு மருந்து அடிக்கும்போது அந்தந்த வார்டு கவுன்சிலர்களை கூட்டிக்கொண்டு கொசுமருந்து அடிக்க சொல்லியுள்ளேன்.இவ்வாறு விவாதம் நடந்தது.கூட்டத்தில் பொன்னமராவதி பேரூராட்சியில் சொத்துவரி 150 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைப்பது என்றும், தொழிற்சாலைகளுக்கு 100 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைப்பது என்றும், வீடுகளுக்கு 25 சதவீதம் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
source : Dinamalar. |
|
|
|
|
|