|
நகரத்தார் என்பது ஒரு கலாசாரம்: அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் Oct 12, 13 |
|
நகரத்தார் என்பது ஒரு கலாசாரம் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
காரைக்குடி அருகே கோவிலூரில் வெள்ளிக்கிழமை கோவிலூர் மடாலயம் சார்பில் நடைபெற்ற தெய்வத்திரு நாச்சியப்ப சுவாமிகளின் 2-ஆவது குருபூஜைவிழாவையொட்டி, அவரது உருவச்சிலையை திறந்துவைத்து பேசியது:
சுவாமிகளின் 2-ஆவது குருபூஜை விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் கலை ஆர்வம் மிக்கவர். சென்னை கலாஷேத்ராவில் நாச்சியப்ப சுவாமிகள் இருந்த காலகட்டத்தில் அவரை சந்தித்துள்ளேன். மிகப்பெரிய ஆன்மா அவர் மறைந்து ஓராண்டு நிறைவுற்று 2-ஆவது ஆண்டு தொடங்கியிருக்கிறது. இலக்கியம், கலாசாரத் தை காப்பதற்காக மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டவர். மேலும் கல்வி அடிப்படை யில் செட்டிநாட்டுகலாசாரம்,கலைகளையும் அவர் காப்பாற்றியிருக்கிறார்.
உலகில் சமயத்தையும், இலக்கியத்தையும் போற்றக்கூடியவர்கள் நகரத்தார்களும், ஈழத்தமிழர்களும்தான்.செட்டிநாடு பாரம்பரியம் என்று சொன்னால் இங்குள்ள செட்டிநாடு வீடுகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இங்குள்ள வீடுகள் போன்று வேறு எங்குமே இல்லை.
வரும் நவம்பர் மாதம் 29,30 மற்றும் டிச. 1 ஆகிய மூன்று நாள்கள் மும்பையில் செட்டிநாடு கலாசாரம் கண்காட்சி நடைபெறவிருக்கிறது என்றார் அமைச்சர்.
விழாவில் கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் முன்னிலை வகித்தார். |
|
|
|
|
|