Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்றம் - சென்னை, துலா ஸ்நானம் மற்றும் திருத்தல சுற்றுலா  Oct 22, 13
 
 
நகரத்தார் நற்பணி மன்றம் – சென்னை, பாஸ் அவின்யு , 3/621,கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், சென்னை – 41, உறுப்பினர்கள் 18/10/2013 மற்றும் 19/10/2013 அன்று, இரண்டு நாட்கள் திருத்தல சுற்றுலா சென்று வந்தனர்.

துலா மாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தலைக்காவேரி, ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், திருவையாறு, மயிலாடுதுறை, கும்பகோணம், முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

ஐப்பசி முதல் தேதியன்று ( 18/10/2013) நகரத்தார் நற்பணி மன்ற உறுப்பினர்கள், கும்பகோணம் காவேரிக் கரையிலுள்ள புனித இடங்களில் (சக்கரா படித்துறையில்) நீராடி பூஜை செய்து வழிபட்டனர் .

நவக்கிரக ஆலயங்கள், ராமலிங்க சுவாமி தேவஸ்தானம் 108 சிவாலயம், ராஜ ராஜ சோழன் வழிபட்ட திருவலஞ்சுழி மகா காளி, பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன், கோவிந்தபுரம் பாண்டுரங்கன் ஆலயம் ஆகியவற்றிற்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர் .
சுற்றுலா ஏற்பாடுகளை தலைவர் Dr.M.சீனிவாசன் சிறப்பாக செய்திருந்தார்கள்.