Nagaratharonline.com
 
100 மையங்களில் போலியோ மருந்து  Jan 11, 10
 
பொன்னமராவதி ஒன்றியத்தில் 100 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 10 ஆயிரத்து 454பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், பொன்-புதுப்பட்டி ரோட்டரி கிளப்பும் இணைந்து இலவச போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கினர். பொன்னமராவதி பஸ் ஸ்டாண்டில் பேரூராட்சி தலைவர் லட்சுமணன் போலியோ சொட்டு மருந்தை வழங்கி தொடங்கி வைத்தார். பொன்னமராவதியில் 26 மையங்களில் டாக்டர் சதாசிவம் தலைமையில் 2 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பொன்-புதுப்பட்டி ரோட்டரி கிளப் தலைவர் ரமேஷ், செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் சரவணன், மாவட்ட துணை ஆளுநர் ராமன், உறுப்பினர்கள் பாண்டிச்செல்வம், மணிகண்டன், மருதுபாண்டியன், முரளிதரன், பேரூராட்சி கவுன்சிலர் ஜெயமணி, புள்ளியியல்துறை அலெக்சாண்டர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். அதேபோல காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளில் 26 மையங்களில் 2 ஆயிரத்து 754 குழந்தைகளுக்கு டாக்டர்.நவரத்தினசாமி தலைமையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்.பிரேமா தலைமையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்.சரவணன் தலைமையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதேபோல துணை சுகாதார நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

source : Dinamalar