|
NEWS REPORT: பிள்ளையார் நோன்பு பற்றி மாலைமலர் செய்தித்தாளில் வெளிவந்தவை Nov 19, 13 |
|
ஆண்டுதோறும் சஷ்டியும், சதயமும் கூடும் நாளில் விநாயகரை வழிபட்டால் வாழ்க்கை வளமாக அமையும். இந்த அடிப்படையில் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியன்று ஆனைமுகப்பெருமானை முழுமையாக அனைவரும் பெருந்திரளாக சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
செட்டிநாட்டு பகுதியில் நகரத்தார் பெருமக்கள் சஷ்டியும், சதயமும் கூடும் நாளில் இல்லத்தில் விநாயகரை வைத்து வழிபட்டு இழை எடுத்து கொள்வார்கள். விநாயகரை முன்னிலையில் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி, நெல்,சோளம், அவல், கம்பு, எள் போன்ற ஐந்து விதமான தானியங்களை பொரித்து அதனுடன் இனிப்பான அப்பமும் வைத்து வழிபடுவர்.
பச்சரிசி மாவோடு வெல்லம் சேர்த்து பிள்ளையார் போல் சிறு சிறு உருண்டைகளாக்கி அதில் தும்பிக்கை போல 21 நூல்களால் ஆன திரியை இணைத்து அதில் சுடர் ஏற்றி அப்படியே சாப்பிடுவர். இந்த பிள்ளையார் நோன்பு விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் பிள்ளை செல்வமும் உருவாகும். எல்லையில்லாத நற்பலனும் கிடைக்கும்.
குடும்பத் தலைவர் அல்லது வயதில் மூத்தவராக இருப்பவர்கள் இழை எடுத்துக் கொடுப்பது மரபு. அப்படி சஷ்டியும், சதயமும், கூடுவதில் மாற்றம் இருந்தாலும், திருக்கார்த்திகையில் இருந்து 21-வது நாள் இந்த விழா வரும். இதனை நினைவுகூர்வதற்காகத் தான் 21 நூல்களால் ஆன திரியை உபயோகிப்படுத்தி வருகிறார்கள். இந்த திருநாள் கார்த்திகை மாதம் 22-ம் நாள் 8.12.13 ஞாயிற்று கிழமை வருகிறது. |
|
|
|
|
|