|
கொப்பனாபட்டி ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி மனு: புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க Jan 14, 10 |
|
மதுரை, ஜன.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள கொப்பனாபட்டியை பட்டியலில் இருந்து நீக்கக் கோரிய மனுவுக்கு, மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து, பொன்னமராவதி தாலுகா, னாபட்டியைச் சேர்ந்த எம்.கே.ராமநாதன் தாக்கல் செய்த மனு: ""கொப்பனாபட்டி ஊராட்சி கடந்த 1970}ல் கொப்பானாபட்டி, கொன்னைப்பட்டி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதனால், இரு கிராமங்களுக்கும் இடையே குளங்களில் தண்ணீர் நிரப்புவது முதல் பொது திருவிழாக்கள் வரை மோதல் போக்கு நிலவிவருகிறது.
மேலும், ஜல்லிக்கட்டுத் திருவிழா நடத்துவதில் இரு ஊராட்சிகளுக்கும் இடையே உரிமைப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, 2009}ல் நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடும், ஆர்.டி.ஓ. விசாரணையும், 21 பேர் மீதான குற்ற வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் பட்டியலில் கொன்னையூர் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கொப்பனாபட்டியில் ஜல்லிக்கட்டு என 7.9.2009}ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே ஆர்.டி.ஓ. பிறப்பித்த தடை உத்தரவுக்கு எதிரானது ஆகும்.
எனவே, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து, பட்டியலில் இருந்து பெயரை நீக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் பி.முருகேசன், ராஜஇளங்கோ ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்குமாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
Source:Dinamani Jan 15 |
|
|
|
|
|