Nagaratharonline.com
 
NEWS REPORT: பௌர்ணமி நாட்களில் 3 அம்மன் தரிசனம்  Dec 4, 13
 
 
பொதுவாக ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி மற்றும் சித்ரா பௌர்ணமி தினத்தில் விரதம் இருந்து சென்னைக்கு அருகே அமைந்துள்ள மூன்று அம்மன்களை தரிசித்தால் அனைத்து நலன்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

அந்த மூன்று அம்மன்கள்… ஸ்ரீ திருவுடைநாயகி, ஸ்ரீ வடிவுடைநாயகி, ஸ்ரீ கொடியிடை நாயகிகளாவர்.

காலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ள மீஞ்சூர் அருகில் உள்ள மேலூர் ஸ்ரீ திருவுடைநாயகி அம்மனையும், மதியம் திருவொற்றியூர் ஸ்ரீவடிவுடைநாயகி அம்மனையும், மாலையில் வடதிருமுல்லைவாயிலில் உள்ள ஸ்ரீகொடியிடை நாயகி அம்மனையும் அந்தந்த கோயில்களுக்குச் சென்று வழிபடலாம். அப்படிச் செய்வது காசி, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களுக்குச் சென்று வழிபட்டதற்கு ஈடாகும் என்பது ஐதீகம்.

சிலர், தவறுதலாக திருமுல்லைவாயிலில் அமைந்துள்ள பச்சையம்மனை கொடியிடை நாயகி என்று கருதி அந்த கோயிலுக்குச் சென்று வருகிறார்கள். ஆனால், பச்சையம்மன் கோயிலை தாண்டி உள்ள சிவன் கோயிலில் வீற்றிருப்பவரே கொடியிடை அம்மனாகும். இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.