Nagaratharonline.com
 
எட்டு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி  Jan 14, 10
 
மாவட்டத்தில் எட்டு இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பொங் கலை முன்னிட்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு, வடமாடு, வாடி மஞ்சுவிரட்டு நடக்கும். இதற்காக நூற்றுக்கணக்கான காளை, களையார்கள் தயாராவர்.




காளைகள் முட்டி உயிரிழப்பு ஏற்படுவதால், கோர்ட் உத்தரவுப்படி கடும் நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. இதன் படி காளை, வீரர், பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த, விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.




எட்டு இடங்களுக்கு அனுமதி: விதிமுறைக்கு உட்பட்டு நடத்த சம்மதித்த, எட்டு கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன் விபரம்:




ஜனவரி: சிவகங்கை அருகே கண்டுப்பட்டி, திருப்புத் தூர் அருகே சிறாவயல், காரைக்குடி அருகே வைரவபுரம்.
பிப்ரவரி: திருப்புத்தூர் அருகே அரளிப்பாறை, எம்.புதூர்.
மார்ச்: திருப்புத்தூர் அருகே நெடுமரம், கல்லல் அருகே தேவப்பட்டு.
மே: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக் கம்.
இதுகுறித்த அறிவிப்பு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

source : Dinamalar