|
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17/12/2013 ஆருத்ரா தரிசனம் Dec 5, 13 |
|
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் டிசம்பர் 17-ஆம் தேதி நள்ளிரவு முதல் 18-ஆம் தேதி அதிகாலை வரையில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
இத்திருக்கோயிலில் மட்டுமே பஞ்சலோகத்திலான பஞ்சசபை நடராஜருக்குரிய ஐந்து உற்சவர் திருமேனிகள் உள்ளன. பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிரசபை, சித்திர சபை என பஞ்ச சபைக்கும் தனித்தனி உற்சவத் திருமேனிகள் உள்ளன.
திருக்கோயிலில் அருள்மிகு நடராஜர் (கால்மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர்), அருள்மிகு சிவகாமி அம்மன், அருளாளர் மாணிக்கவாசகர் சுவாமிகள் ஆகியோரது உற்சவத் திருமேனிகள் ஆருத்ரா தரிசனம் அன்று 6 கால் பீடத்தில் எழுந்தருள்வர். மேலும் மற்ற 4 சபைகளுக்குரிய அருள்மிகு நடராஜர், அருள்மிகு சிவகாமி அம்மன் ஆகியோர் 100 கால் மண்டபத்தில் எழுந்தருள்வர். ஆருத்ரா தரிசனத்தின்போது ஏககாலத்தில் இரு இடங்களிலும் பூஜை, அபிஷேகம் நடைபெறும்.
அதிகாலை பூஜை நிறைவுற்று காலை 7 மணிக்கு (டிச. 18-ஆம் தேதி) மாசி வீதிகளில் பஞ்சசபை நடராஜர், சிவகாமி அம்மனுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர் |
|
|
|
|
|