|
மொபைல் மணியார்டர் சேவையைத் தொடங்கியது அஞ்சல்துறை Dec 20, 13 |
|
மொபைல் மணியார்டர் மூலமாக ஒருவர் ஒருமுறையில் ரூ.1000 முதல் ரூ.10,000 வரை பணம் அனுப்பலாம். ஒருவர் தினமும் எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ரூ.1000 முதல் ரூ.1500 வரை அனுப்பினால் ரூ.45-ம், ரூ.1501 முதல் ரூ.5000 வரை அனுப்பினால் ரூ.79ம், ரூ.5000 முதல் ரூ.10000 வரை அனுப்பினால் ரூ.112-ம் தேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
பணம் அனுப்ப விரும்புபவர்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தையோ அல்லது அருகிலுள்ள தலைமை அஞ்சலகத்தையோ அணுகி, பணம் அனுப்புவதற்கான விண்ணப்பப் படிவத்தைபூர்த்திசெய்து, உரியதொகையைச் செலுத்த வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக 6 இலக்க ரகசிய குறியீட்டு எண் பணம் அனுப்புபவரின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பணம் அனுப்பும் விவரம், பணம் பெறும் அஞ்சலகம் குறித்த விவரம் பணம் பெறுபவரின் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.
பணம் பெறுபவர் விவரம், அவரது அடையாளச்சான்று, பணம் அனுப்புபவர் மூலம் பெறப்பட்ட ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை மொபைல் மணியார்டர் சேவை உள்ள எந்த அஞ்சல் அலுவலதத்திலும் காண்பித்து பணத்தை சில நிமிஷங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த சேவையின் மூலமாக, ஒரு சில நிமிஷங்களில் நாட்டின் எந்தப் பகுதிக்கும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். பணம் அனுப்புநர் மற்றும் பெறுபவர் மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். |
|
|
|
|
|