|
B.E.Final Year Students : வேலைவாய்ப்பு முகாம்: அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு Dec 20, 13 |
|
பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களுக்காக மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
சென்னை மண்டல கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் 30, 31 தேதிகளில் சென்னை மாங்காடு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துக்குமரன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது.
இதற்கான முகாம் சென்னை மண்டலத்துக்கு டிசம்பர் 27, 28 தேதிகளில் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் அமைந்துள்ள ஆனந்த் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடத்தப்படுகிறது. கோவை மண்டல மாணவர்களுக்கு கோவை நீலாம்பூரில் அமைந்துள்ள கதிர் பொறியியல் கல்லூரியில் 2014 ஜனவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெறும்.
திருநெல்வேலி மண்டல கல்லூரி மாணவர்களுக்கு 2014 ஜனவரி 10, 11 தேதிகளில் திருநெல்வேலி மெலதெடியூரில் அமைந்துள்ள பிஎஸ்என் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் அனைத்திலும் சிடிஎஸ்,
இன்ஃபோசிஸ் நிறுவனமும் பங்கேற்று மாணவர்களைத் தேர்வு செய்ய உள்ளது. |
|
|
|
|
|