|
திருப்புத்தூரில் காது,மூக்கு,தொண்டை பரிசோதனை மருத்துவ முகாம் Dec 24, 13 |
|
திருப்புத்தூர் பாபா அமிர்பாதுஷா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் டிச.29ல் இலவச காது,மூக்கு,தொண்டை பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் முகாமில் காது கேளாதவர்களுக்குஇலவசமாக காது கேட்கும் கருவி பொருத்தப்படும். குறட்டை,குரல்வளை அறுவை சிகிச்சை இலவசமாக செய்ய பரிந்துரைக்கப்படும். காது,மூகு,தொண்டை,கழுத்துப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். 94439 20385,94431 74707 எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
ஏற்பாட்டினை திருப்புத்தூர் ஆறுமுகநகர் லயன்ஸ் சங்கம்,மதுரை கிறிஸ்தவ மருத்துவமனை இணைந்து செய்கின்றனர். |
|
|
|
|
|