Nagaratharonline.com
 
ராமேஸ்வரம் தீர்த்தக்கிணறுதண்ணீரின் அளவு கணக்கீடு  Dec 26, 13
 
ராமேஸ்வரம் கோயில் புனித தீர்த்தங்களில், தண்ணீரின் அளவை, பொதுப்பணி நீரியியல் துறை முன்னாள் அதிகாரிகள் கணக்கிட்டனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 22 தீர்த்தங்கள் உள்ளன. மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி தீர்த்தங்களை தொட்டியில் சேகரித்து, சென்சார் கருவி மூலம் "ஷவர்' போல பக்தர்கள் மீது ஊற்ற முடிவு செய்யப்பட்டது.

மின் மோட்டார் மூலம் ஒரு மணி நேரம் தொட்டியில் தண்ணீரை சேகரித்தனர். அரை மணி நேரத்திற்கு பின்னர், மீண்டும் தீர்த்தக்கிணற்றில் நீர் ஊறும் அளவை கணக்கிட்டனர். இந்த ஆய்வறிக்கையை, மதுரை ஐகோர்ட் கிளை நியமித்த, பொதுப்பணித்துறை உயர் அதிகாரியிடம் விரைவில் சமர்ப்பிக்க உள்ளனர்.