Nagaratharonline.com
 
சிலம்பு விரைவு ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தல்  Dec 29, 13
 
சென்னையிலிருந்து மானாமதுரை வரை இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயிலை வாரம் முழுவதும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி மாநிலப் பொதுச் செயலர. ஏ. சந்திரசேகரன் ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:
சென்னை - மானாமதுரை வரை செல்லும் சிலம்பு விரைவு ரயில் (எண்:16181 16182) தற்போது வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதை வாரம் முழுவதும் இயக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 லட்சத்தும் மேற்பட்ட பொதுமக்கள், பெண்கள், மூத்தகுடிமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதே உண்மை நிலையாகும். எனவே இந்த ரயில் சேவையை அனைத்து நாட்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்காக அனைத்துத்தரப்பினரும் காத்திருக்கிறோம்.