Nagaratharonline.com
 
ராயவரத்தில் கல்வியாளரின் 100-வது பிறந்த நாள் விழா  Dec 30, 13
 
ராயவரத்தில் கல்வியாளர் பழனியப்பச் செட்டியாரின் 100 -வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராயவரத்தில் சு.கதி. காந்தி உயர்நிலைப் பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழா மற்றும் பள்ளியின் வைர விழா, பழனியப்பச் செட்டியாரின் 100-வது பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பழனியப்பச் செட்டியார் தலைமை வகித்தார்.

இதில் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டு ரூ. 1.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பள்ளியின் புதிய கட்டடத்தை திறந்துவைத்தார்.