|
NEWS REPORT: காலை உணவு கட்டாயமல்ல ! Jan 20, 14 |
|
இன்றைய காலை உணவுகள் காபி, டீ, இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், ரொட்டி, கம்பெனி உணவுகள் என இருக்கிறது. இவை எல்லாமே அமிலம், வாயு, பசைத்தன்மை நிறைந்தவை. காலை டிபன் சாப்பிட்டவர்கள் அனைவரும் மந்தமாகி விடுகின்றனர்.
கோதுமையில் ரப்பர் தன்மையும், பசைத் தன்மையும், ஒருவித விஷவாயுவும் இருப்பதால் பல வலிகளுக்கு காரணமாக இருக்கிறது. இப்போது அமெரிக்காவில் கோதுமை உணவை மக்கள் தவிர்க்கிறார்கள். இது குளுடன் லிஸ்டில் வருகிறது. கோதுமையில் உடல் எடை குறையும் என்பதும் சர்க்கரை நோய் குணமாகும் என்பதும் தவறு.
காலை உணவு திரவ உணவாகத்தான் இருக்க வேண்டும். முதலில் தண்ணீரை தாராளமாகக் குடித்து குடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்து பழச்சாறுகளையும், பழங்களையும் சாப்பிடலாம். சீரகம், கொத்தமல்லி, சுக்கு போன்றவற்றுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து காபி போல தயாரித்து சாப்பிடலாம்.
காலை உணவு சிறுதானிய கஞ்சியாக இருக்கலாம். அதில் தேங்காய் துருவல் மட்டும் சேர்த்தால் போதும். தேங்காயில் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளன. இது தாய்ப்பாலுக்கு சமமானது.
காலை உணவு அவசியமில்லை என்பது இயற்கையின் விதி. பசியும், செரிமான சக்தியும் சூரியனின் சக்தியைப் பொருத்தது. சூரியன் உச்சிக்கு வரும்போதுதான் செரிமான சக்தி சரியாக இருக்கும்.
காலையில் எழுந்தது முதல் சுமார் மூன்று மணி நேரத்திற்கு உடம்பு சுத்தப்படுத்தும் வேலையை சிறப்பாகச் செய்யும். அதற்கு வாய்ப்பு தர வேண்டும். சுத்தப்படுத்துவதற்கு உதவி செய்யும் நீர் ஆகாரங்களைத்தான் சாப்பிட வேண்டும்.
காலை உணவு மறுப்போர் சங்கம் பற்றி காந்திஜி தனது சுய சரிதை நூலில் தெளிவாகக் கூறியுள்ளார். காலை உணவை நிறுத்திய பின்பு அவரது தலைவலி போய் விட்டதாம்.
இயற்கை மருத்துவத்தில் சர்க்கரை நோய், புற்றுநோய் உள்பட அனைத்தையும் குணமாக்க முடிகிறது. எப்படி?
காலையில் சாப்பிடாமல் இருந்து பசியை உண்டாக்கி வளர்த்து வைத்தால்தான் திருக்குறள் கூறியபடி மாறுபாடு இல்லாத உணவை, அளவறிந்து, முறையறிந்து உண்டு நோய் வராமல் வாழலாம்.
source : Dinamani |
|
|
|
|
|