|
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜனவரி 26 தெப்பத் திருவிழா Jan 17, 10 |
|
திருப்பரங்குன்றத்தில் ஜனவரி 26-ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் 10 நாள் தெப்பத் திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கம்பத்தடி மண்டபத்தில் காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் தெப்பத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறும்.
விழாவையொட்டி தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலை மயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.
ஜனவரி 25-ம் தேதி தை கார்த்திகையையொட்டி காலை 9 மணிக்கு தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு சிறிய வைரத் தேரோட்டமும் நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியாக ஜனவரி 26-ம் தேதி காலை 10.45 மணிக்கு தெப்பத்தில் சுவாமி தெய்வானையுடன் வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மைய மண்டபத்தில் உலா வருவதலும், இரவு 8 மணிக்கு தெப்பத்தில் மின்னொளியில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
source : Dinamani |
|
|
|
|
|