Nagaratharonline.com
 
மாத்தூர் நகர சிவன் கோயிலில் பிப். 14-ல் தேரோட்டம்  Feb 9, 14
 
மாத்தூரில் நகரத்தார் கோயிலான அருள்மிகு பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐந்நூற்றீஸ்வரர் திருக்கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி, பிப்ரவரி 14-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு கடந்த பிப்.6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் மாலை வேளைகளில் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு வீதியுலா நடைபெற்றுவருகிறது.

சனிக்கிழமை சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் சிம்மவாகனத்திலும் எழுத்தருளினர். ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா நடைபெற்றது.

விழாவின் 9 ஆம் நாள் திருவிழாவாக தேரோட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 14) நடை பெறவிருக்கிறது. தேரோட்டத்தையொட்டி காலையில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளு கிறார். மாலை 4.45 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிப்.15 காலையில் தீர்த்தவாரி உற்சவமும், மாலையில் சப்தாவரணமும் நடைபெற்று திருவிழா நிறைவடைகிறது.

மாத்தூர் நகரச்சிவன் கோயிலைச்சார்ந்த அருள்மிகு அழகிய நாச்சியம்மன் கோயில் உற்சவத்திருவிழா பிப். 3-இல் தொடங்கி பிப்.5-ஆம் தேதி நிறைவுற்றது.

விழாவில் மாத்தூர் கோயிலைச்சார்ந்த நகரத்தார்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.