|
கண்ணதாசன் மணி மண்டபத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா Feb 17, 14 |
|
காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகளின் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடற்ற தமிழகம் என்ற இலக்கினை அடையும் வகையில் பாரம்பரிய உணவுத் திருவிழா கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
விழாவைத் துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தினை வகைகளில் கால்சியம், இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இவ்வுணவு பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ஆகியோரின் ஆரோக்கியத்துக்கு மிகவும் இன்றியமையாதது. தினை வகைகளான கேழ்வரகு, கம்பு ஆகியவை சிவகங்கை மாவட்டத்தில் அதிக அளவில் கிடைப்பதால் இதனை வாங்குவது எளிது. தற்போது வேளாண்மை தோட்டக் கலைத் துறையின் மூலம் மானாவாரி நிலங்களில் தினை வகைகளை சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு நல்ல பயன் கிடைக்கும் என்றார். |
|
|
|
|
|