|
பி.இ. IT படிப்பை கைவிடும் 18 கல்லூரிகள் Feb 18, 14 |
|
தமிழகத்தில் வரும் 2014-15 கல்வியாண்டில் 18 பொறியியல் கல்லூரிகளில் பி.டெக். தகவல் தொழில்நுட்ப படிப்பை கைவிட முடிவு செய்துள்ளன.
கடந்த 2013-14 கல்வியாண்டில் இந்தப் படிப்பை 19 பொறியியல் கல்லூரிகள் கைவிட்டன. இப்போது இந்தப் படிப்பை கைவிட 18 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்துள்ளன. மேலும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளை இழுத்து மூடுவதற்கும் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள், கல்லூரி வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
நடந்து முடிந்த 2013-14 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் இசிஇ பிரிவில் உள்ள அரசு ஒதுக்கீட்டிலான 42,966 இடங்களில் 24,992 இடங்கள் நிரம்பின.
பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் உள்ள 33,505 இடங்களில் 15,684 இடங்கள் நிரம்பின. பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) துறையில் மொத்தமுள்ள 16,466 இடங்களில் 6,705 இடங்கள் மட்டுமே நிரம்பின. |
|
|
|
|
|