|
திருமண விழா Jan 18, 10 |
|
பங்கு சந்தை, ஏற்றுமதி கட்டுரைகள் எழுதுபவரும், வங்கியாளருமான சேதுராமன் சாத்தப்பன் - அன்னபூரணி மகள் தெய்வானைக்கும் தேவகோட்டை பேராசிரியர் சோமசுந்தரம் - வள்ளியம்மை மகன் முத்து கணேசுக்கும் நெற்குப்பையில் நேற்று திருமணம் நடந்தது.இளையத்தாக்குடி நகரத்தார் சங்கம் சார்பில், சேதுராமன் சாத்தப்பன் எழுத்து பணிக்காக பாராட்டப்பட்டார். பங்கு சந்தை நிபுணர் சோம வள்ளியப்பன் பேசினார். கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம், கவிஞர் கா.சு.மணியன், ஆச்சி வந்தாச்சு மாத இதழ் ஆசிரியர் பழனியப்பன், அம்பத்தூர் நகரத்தார் சங்க தலைவர் மற்றும் இளையேத்தாக்குடி நகரத்தார் சங்க தலைவர் லேனா காசிநாதன், திருச்சி நகரத்தார் சங்க முன்னாள் தலைவர் ஹைடெக் பழனியப்பன், காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்க தலைவர் அடைக்கப்ப செட்டியார், ஈரோடு நகரத்தார் சங்க தலைவர் சிவசுப்பிரமணிய செட்டியார், நகரத் தார் மலர் ஆசிரியர் இளங் கோவன் பங்கேற்றனர்.
source : Dinamalar |
|
|
|
|
|